கம்பீர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கம்? பிசிசிஐ கொடுத்த விளக்கம் – முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இவர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிந்த பின்னர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் பயிற்சியாளராக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை நீட்டிப்பார் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அறிவித்திருந்தது. இருப்பினும் அவர் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

Team India Under Gautam Gambhir: டி20ல் மட்டும் நல்ல செயல்பாடு 

இந்திய அணி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறது. சமீபத்தில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், தொடர் தோல்விகளால் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷ் டிராபியின் இறுதி போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பீரை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர். 

Team India Under Gautam Gambhir: ஒருநாள், டெஸ்ட்டில் மோசமான செயல்பாடு 

இவரது பயிற்சியில் இந்திய அணி தொடர் சந்தித்தது மட்டுமல்லாமல், கம்பீர் தனக்கு பிடித்த வீரரை மட்டுமே அணியில் வைத்துக்கொள்ள விரும்புகிறார் என்றும், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கு இவரே காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நல்ல ஒரு அனுபவம் வாய்ந்த ரவி சாஸ்திரி போன்ற ஒருவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று குரல்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 

BCCI: பிசிசிஐ விளக்கம் 

வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தான் அவரது கடைசி வாய்ப்பு என்றும் கோப்பையை கைப்பற்றும் நிலையில், அவர் அப்பதவியில் தொடர்வார் என்றும் இல்லையென்றால் அவர் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் பதவி நீக்கம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா.

Gautam Gambhir: கெளதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கமா?  

இது தொடர்பாக பேசி அவர், இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 140 கோடி பேர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்கள் இருக்கும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் யாரை பற்றி யாரை பேசுவதற்கு உரிமை உண்டு. அந்த வகையில்தான், தற்போது கம்பீர் குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பதவி நீக்கம் குறித்து பேசி வருகின்றனர். ஆனால், பிசிசிஐயை பொறுத்தவரையில், கம்பீரை பதவி நீக்கம் குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.