சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசி உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்.21) மாலையுடன் நிறைவடைவதையொட்டி, தமிழ்நாடு மக்களிடம் உரையாற்றும் வகையில், சிறப்புக் காணொளியை வெளியிட்டுள்ளார் தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் தெரிவித்ததாவது, […]