நயன்தாராவையே முந்திய தமன்னா! வெறும் 6 நிமிட நடனத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவாவில் நடிகை தமன்னாவின் அதிரடி நடனம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ?பிரம்மாண்ட சம்பளம் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

அலறவிடப்போகும் கனமழை! பொங்கலுக்கு சம்பவம் இருக்கு.. எங்கெல்லாம்? வெதர்மேன் அலர்ட்!

Tamil Nadu Weatherman Latest News: தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.  

டி20 உலகக் கோப்பை: முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்? முழு விவரம்

Mohammed Siraj Latest News: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிதான் பங்கேற்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. அதனை இம்முறை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்கள் அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  … Read more

திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்! இன்று ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சமி

சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்   குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பு  அடைந்துள்ளது. இதற்கிடையில் கூட்டணி குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன.  தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை … Read more

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்

புதுடெல்லி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது.இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. … Read more

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார். ஆனால், பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பு விஜய் ஹசாரே … Read more

‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ – நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ வாதம்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. … Read more

தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு – உடனே கவனியுங்க!

கடந்த ஆண்டு சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டு உலோகங்களுமே எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டன. இந்த ஆண்டு அந்த இரண்டு உலோகங்களுடன் இன்னும் இரண்டு உலோகங்களுக்கு மவுசு உள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “2026-ம் ஆண்டை ‘உலோகங்களின் ஆண்டு’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலோகங்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புள்ளது. உலோகங்கள் என்றதும் முதலில் தங்கம், வெள்ளி. அடுத்தது, காப்பர். இத்துடன் இப்போது அலுமினியமும் சேர்ந்துள்ளது. அதனால், உலோக முதலீடுகளில் இப்போது கவனம் செலுத்தலாம். … Read more

இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை: இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” என கல்லூரி மாணவர்களுக்கு இலவ மடிக்கணினி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘உலகம் உங்கள் கைகளில்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், “இந்த மடிக்கணினி ஒரு பரிசு அல்ல, … Read more

டெல்லியில் இன்று 46-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதுடெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை … Read more