தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நியமித்து கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வு, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தலக்குறிச்சி காமராஜ் (எஸ். காமராஜ்) தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரிக்கும் … Read more

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

புதுடெல்லி, எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் … Read more

விராட் கோலியின் சாதனை சமன்…39 வயதில் வரலாறு படைத்த டேவிட் வார்னர்

சென்னை, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்(39) , கடந்த 3-ம் தேதி பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது 9வது டி20 சதத்தைப் பதிவு செய்த அவர், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார். 65 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்த வார்னர், நடப்பு பிக் பாஷ் சீசனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு … Read more

ரஷிய எண்ணெய் விவகாரத்தில் உதவாவிட்டால்… இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலன் கருதியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்த ஒரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என இந்தியா கூறி வருகிறது. ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், இந்தியாவுக்கு … Read more

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு … Read more

ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் தொடங்குவது எப்போது? சட்டென ப்ரீ-புக் செய்வது எப்படி?

Jana Nayagan Pre-Booking Date And Time : ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் குறித்த குழப்பம், மக்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், டிக்கெட்டை முன்கூட்டியே எப்போது ப்ரீ புக் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

இந்த ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

Pongal Gift Rupees 3000: 2025ல் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பொங்கல் பரிசு பண உதவி இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.   

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. CSK வீரரை நீக்கியது எந்த வகையில் நியாயம்? முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதில் டி20 தொடரில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய விளையாடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 03) ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவித்தது. இத்தொடருக்கு காயத்தால் விலகி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி உள்ளார். அதேசமயம், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரில் சதம் … Read more

Samsung Galaxy S25 Ultra-க்கு டஃப் கொடுக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்: 2026ல் இதுதான் டாப்

Best Android Smartphones 2026: 2026 ஆம் ஆண்டில் Samsung Galaxy S25 Ultra வாங்க வேண்டாம் என்கிற எண்ணத்துடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தியை ஒருமுறை கட்டாயம் படிக்கவும். தற்போது பிரபலமான இந்த Android உலகில் உங்களுக்கு ஏராளமான ஸ்மார்ட்போன் விருப்பங்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக கேமராவை மையமாகக் கொண்ட ஃபிளாக்ஷிப்கள் முதல் வலுவான செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரை, விலை, புகைப்படம் எடுத்தல் அல்லது பேட்டரி ஆயுள் அடிப்படையில் Galaxy … Read more

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 155 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 சென்னை:  வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்,மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் … Read more