ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்புடன்  பொங்கல் செலவுகளுக்கான ரொக்கப் பணம் உண்டா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி,  , ஒவ்வொரு ஆண்டும்  ரேசன்கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், இந்த இலவச தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுகஅரசும், கடந்த  2022, … Read more

இந்தூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கூறியிருந்தார். ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவலின் படி, 14 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிகிறது. சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் … Read more

டி20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

கேப்டவுன், 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ரிக்கல்டன் அணியில் இடம் பெறவில்லை. தென் … Read more

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்; அமெரிக்கா களத்தில் இறங்கும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சில ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், … Read more

திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை! இது திருவண்ணாமலை சம்பவம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த செங்கம் பக்கிரிபாளையம் பகுதியில்  திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்  திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கம் அருகே திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி அமிர்தம் ஆகியோர் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த கீற்று கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டை வெளியே பூட்டிவிட்டு தீ வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் திமுக … Read more

அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்! ஜோதிமணி குமுறல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜோதிமணி தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். சமீபகாலமாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புகைச்சல் எழுந்துள்ளது.  பிரவீண் சக்ரவர்த்தியின் நடவடிக்கையால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்ட நிலையில்,   கூட்டணி கட்சிகள்  மாற்றுக்கருத்துக்களை தெரிவித்த நிலையில், அதுகுறித்த பேச மற்றவர்களுக்கு உரிமை இல்லை, இது உள்கட்சி பூசல் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஜோதிமணி எம்.பி. தனது  மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு … Read more

தாயுமானவர் திட்டம்: ஜனவரி 4, 5-ல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்!

சென்னை: தாயுமானவர் திட்டத்தின்படி,   ஜன. 4, 5-ல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65‘வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி மாதத்தின் 4 மற்றும் 5 … Read more

நெல்லை டூ கோவை! இன்று மழை வெளுக்கப்போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அலர்ட்!

Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் இன்று (ஜனவரி 2)  ஒருசில மாவட்டங்களில்  மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

'டி20 உலகக் கோப்பையை யாருமே பார்க்கப்போவதில்லை' – அஸ்வின் சொல்வது என்ன?

ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இது 10வது டி20 உலகக் கோப்பை தொடராகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் மொத்தம் 7 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். இலங்கை, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வந்தாலும் இலங்கையில்தான் நடக்கும். Add Zee News as a Preferred … Read more