சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்

புதுடெல்லி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது.இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. … Read more

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார். ஆனால், பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பு விஜய் ஹசாரே … Read more

‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ – நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ வாதம்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. … Read more

தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு – உடனே கவனியுங்க!

கடந்த ஆண்டு சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டு உலோகங்களுமே எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டன. இந்த ஆண்டு அந்த இரண்டு உலோகங்களுடன் இன்னும் இரண்டு உலோகங்களுக்கு மவுசு உள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “2026-ம் ஆண்டை ‘உலோகங்களின் ஆண்டு’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலோகங்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புள்ளது. உலோகங்கள் என்றதும் முதலில் தங்கம், வெள்ளி. அடுத்தது, காப்பர். இத்துடன் இப்போது அலுமினியமும் சேர்ந்துள்ளது. அதனால், உலோக முதலீடுகளில் இப்போது கவனம் செலுத்தலாம். … Read more

இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை: இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” என கல்லூரி மாணவர்களுக்கு இலவ மடிக்கணினி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘உலகம் உங்கள் கைகளில்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், “இந்த மடிக்கணினி ஒரு பரிசு அல்ல, … Read more

டெல்லியில் இன்று 46-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதுடெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்டில் சதமடித்த ரூட்: 2-ம் நாள் முடிவில் ஆஸி. அணி 166 ரன்கள் சேர்ப்பு

சிட்னி, ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. … Read more

அமெரிக்கா: ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

நியூயார்க், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி நகரில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடு மீது மர்ம நபர் ஒருவர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளார். அவர் சுத்தியலை கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது, வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் … Read more

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு. இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை. சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர … Read more

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு!

Thiruparankundram Deepa Thoon case latest update: திருப்பரங்குன்றம் தீப தூண் விவகார மேல்முறையீடு வழக்கில் இன்று (ஜனவரி 06) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.