நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் – பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாபரண ஊர்வலம் நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா … Read more