ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' – உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரோடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அ. வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத … Read more

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாட்டில்  இன்றும், நாளை (9, 10)யும் டெல்டா மாவட்டம் உள்பட கடற்கரை மாவட்டங்களில்,  12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு … Read more

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி, 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(என்.சி.பி.) தெரிவித்துள்ளது. அத்துடன் 447 வழக்குகளில் 25 வெளிநாட்டினர் உள்பட 994 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 131 வழக்குகளில் 256 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளுக்கு மொத்தம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. 1 More update தினத்தந்தி Related … Read more

விஜய் ஹசாரே கோப்பை: புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மராட்டியம் – கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 … Read more

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியா வருகை

பாரிஸ், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியாவில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாடு பிப்ரவரி 19-20 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரெஞ்சு … Read more

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய CSK கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட்.. மாஸ் சாதனை! என்ன தெரியுமா?

Ruturaj Gaikwad In Vijay Hazare Trophy: இந்தியாவின் பிரபல உள்ளூர் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த … Read more

பொங்கல் ஜல்லிக்கட்டு: மதுரை போட்டிகளில் பங்கேற்க 12000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு…

மதுரை: பொங்கலையொட்டி, மதுரையில்  நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற  அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க  12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட … Read more

வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்

திருவனந்தபுரம், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க … Read more

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல்: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் அங்குஷ் பரத்வாஜ். முன்னாள் வீரரான இவர் மீது இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த வீராங்கனை பரத்வாஜிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பரத்வாஜ் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். கடந்த 1-ந்தேதி வீராங்கனை இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரியானா மாநிலம் பரிதாபாத் … Read more