டி20 உலகக் கோப்பை: ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத 2 பிரபல அணிகள்! இம்முறை கைப்பற்றுமா?

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடர் இம்முறை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்திய அணி கடந்த முறை டி20உலகக் கோப்பையை தட்டி சென்ற நிலையில், இம்முறை சொந்த மண்ணிலேயே நடப்பதால் மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், இதுவரை 9 டி20 உலகக் கோப்பைகள் நடந்துள்ளது. அதனை வென்றவர்கள் யார் யார்? வெல்ல தவறிய பிரபல அணிகள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.  

Add Zee News as a Preferred Source

2007 – இந்தியா 

2007ஆம் ஆண்டுதான் முதல் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் எம். எஸ். தோனி தலைமையில் விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது. 

2009 – பாகிஸ்தான் 

2009ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி 139 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றியை பெற்றது. 

2010 – இங்கிலாந்து 

2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. அந்த அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதுர்கொண்டது. அந்த அணீ 148 ரன்கள் என்ற இலக்கை 17 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. 

2012 – வெஸ்ட் இண்டீஸ் 

2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்து 138 ரன்கள் டார்கெட் வைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த இலக்கை துரத்திய இலங்கை அணியை 101 ரன்களிலேயே ஆல் அவுட்டாக்கியது. 

2014 – இலங்கை 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இலங்கை அணி வென்றது. அந்த அணி இறுதியில் இந்திய அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில், இந்திய அணி 131 ரன்கள் டார்கெட் வைக்க, அதனை 17.5 ஓவர்களிலேயே அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. 

2016 – வெஸ்ட் இண்டீஸ் 

2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. அந்த அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியில் 161 ரன்கள் டார்க்கெட்டை 19.4 ஓவர்களிலேயே எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியை பெற்றது. 

2021 – ஆஸ்திரேலியா

2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றது. அந்த அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 173 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

2022 – இங்கிலாந்து 

2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு, அந்த அணி வைத்த 138 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் எட்டி கோப்பையை வென்றது. 

2024 – இந்தியா 

2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதிய நிலையில், அந்த அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. 

இதுவரை கோப்பையை வெல்லாத பிரபல அணிகள்

உலக நாடுகளில் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணியும் பிரபல அணியின் பட்டியலில் உள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லவில்லை. நியூசிலாந்து அணி 2021ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை வந்ததும் தென்னாப்பிரிக்கா அணி 2024ல் இறுதி போட்டி வரை வந்ததும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இம்முறை கோப்பையை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் உள்ளன. 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.