Wanindu Hasaranga Ruled Out World Cup: இந்தியாவுடன் சேர்ந்து டி20 உலகக் கோப்பை 2026 தொடரை நடந்தும் இலங்கை அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இல் வெற்றியுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. இலங்கை அணி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஓமனுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இலங்கை அணிக்கு மிகவும் மோசமான பின்னடைவாக பார்க்கப்படும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அணியின் மூத்த ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) காயம் காரணமாக முழு தொடரிலிருந்தும் விலக உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பை 2026 தொடர்: வெளியேறிய இலங்கை வீரர்
28 வயதான வனிந்து ஹசரங்கா, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) அன்று கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியில், அயர்லாந்துக்கு எதிரான 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரம் அந்த போட்டியில் விலையாடும் போது அவருக்கு வலி இருப்பது நன்றாகவே தெரிந்தது. மேலும் தொடை எலும்புப் பிரச்சினையால் அவர் அவதிப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்தக் காயம் தற்பொது அவரை டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியுள்ளது.
வனிந்து ஹசரங்காவுக்கு என்ன ஆச்சு?
இன்று (செவ்வாய்க்கிழமை) எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் ஹசரங்காவின் இடது தொடை தசைநார் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார். உலகக் கோப்பையில் இருந்து ஹசரங்கா நீக்கப்பட்டது இலங்கைக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது. டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கையின் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீரராக அவர் உள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வனிந்து ஹசரங்காவுக்கு பதில் யார்?
கிரிசின்ஃபோவின் கூற்றுப்படி, லெக்-ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா ஹசரங்காவுக்கு பதிலாக இலங்கை அணியில் சேர்க்கப்படலாம். ஹேமந்தா இதுவரை இலங்கைக்காக மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 வயதான அவர் தனது கடைசி டி20 சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக செப்டம்பர் 2025 இல் விளையாடினார்.
JUST IN: Wanindu Hasaranga has been ruled out of the #T20WorldCup after an MRI scan on Tuesday revealed a serious tear in his left hamstring
He will likely be replaced in Sri Lanka’s squad by fellow legspin-bowling allrounder Dushan Hemantha pic.twitter.com/u9lELt336R
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 10, 2026
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: இலங்கை அணி விவரம்
தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜெனித் பெரேரா, சரித் அசலங்க, ஜெனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லகே, துஷான் ஹேமந்த, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதிஷா பத்திரன, மதிஷா பத்திரன.
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More