மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.! | Automobile Tamilan

ரெனால்ட் இந்தியாவின் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 1.3 லிட்டர் டர்போ மற்றும் 1.0 டர்போ என இரு என்ஜினுடன் பல்வேறு நவீன அம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.

2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட டஸ்ட்டர் தற்பொழுது டிசைன் மட்டுமல்லாமல், புதிய லைமுறையினர் கொண்டும் வசதிகளுடன் மிக கடுமையான போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை எதிர்கொள்ள உள்ளது.

டஸ்ட்டர் என்ஜின் விபரம்

புதிய டஸ்ட்டரில் குறைந்த விலை வேரியண்டுகளில் கிகர் காரில் உள்ள அதே 100hp பவர் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் எஞ்சின் மற்றும் பிரிவில் சிறந்த 163hp பவரை கொண்ட 1.3-லிட்டர் என்ஜின் இருக்கும். இரண்டிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கிடைக்கும் அதே வேளையில், 1.3 லிட்டர் எஞ்சின் 6-ஸ்பீடு DCT விருப்பத்துடன் வழங்கப்படும்.

109hp உற்பத்தி செய்யும் 1.8-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் 2026 தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கிடைக்கலாம், இது 49hp மின்சார மோட்டார் மற்றும் 1.4kWh (280V) பேட்டரி மூலம் இயக்கப்படும் 20hp ஹைப்ரிட் ஸ்டார்டர் ஜெனரேட்டருடன் செயல்படுகிறது. ஒருங்கிணைந்த சிஸ்டம் வெளியீடு 160hp வரை பவர் வெளிப்படுத்தலாம்.

new 2026 renault duster interior

இன்டீரியர் மற்றும் டிசைன் மேம்பாடுகள்

புதிய டஸ்ட்டரில் இரட்டை டிஸ்பிளே முறையில் மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பினை பெற்று 10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டரை கொண்டு பனோரமிக் சன்ரூஃப் உடன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS தொழில்நுட்பத்துடன் 360-டிகிரி கேமரா மற்றும் வெண்டிலேட்டட் சீட்கள் உள்ளன.

முன்புறம் காரினை சற்று பெரிதாக உயரத்தி காட்டுகின்ற பானெட்டில் ‘Duster’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய கிரில் மற்றும் ‘Y’ வடிவ எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் ஹெட்லைட் உள்ளது. பக்கவாட்டில் மிக சிறப்பான கிளாடிங் உடன், 212 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்களும், பின்பக்கம் சி-பில்லரில் மறைத்து வைக்கப்பட்ட டோர் ஹேண்டில்கள் மற்றும் புதிய எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

புதிய ரெனோ டஸ்ட்டரின் விலை ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை (Ex-showroom) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

new 2026 renault duster fr new 2026 renault duster rear

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.