தமிழக அரசின் 15 அறிவிப்புகள்: அரசு வேலை தேடுபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் Good News

TN Govt Announcements: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள 15 முக்கிய செய்திகளான ரயில்வே வேலைவாய்ப்பு, அமைச்சரவைக் கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்த முழு விவரம்.

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதலமைச்சர் ஸ்டாலின்

 சென்னை:  சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது?  என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை  கண்டித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி பேசிய போது, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் பேச்சிற்கான … Read more

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால், அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம் ஆட்சி முடங்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் … Read more

முதல்வர் vs ஆளுநர்: துணைவேந்தர் நியமன அதிகாரம் -உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

TN University News: தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டத்திற்கு மத்தியில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Leader: "மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை!" – லெஜெண்ட் சரவணன்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘லீடர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரை வாங்கி சிறப்பித்தார் வணிக சங்கத் தலைவர் விக்ரம ராஜா. அவர் பேசுகையில், “என்னை அழைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் எல்லையில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகரையும் லெஜெண்ட் சரவணன் அழைத்து சிறப்பித்திருக்கிறார்” என்று கூறினார். Lyricist Ghibran இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “துணிவு … Read more

விஜய் கட்சிக்கு 18% வாக்கு வங்கி உள்ளது! பிரவீன் சக்ரவர்த்தி

சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தவெக வளர்ந்துவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, தனித்து போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றுவார் என்றும் கணித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி உருவாகி உள்ளது. … Read more

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்…' – நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், … Read more

தலைநகர் டெல்லியில் தொடரும் மர்மம்! பதறவைக்கும் புள்ளிவிவரம்: 15 நாட்களில் 800 பேர் மாயம்

Delhi Missing Cases: 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 807 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 509 பேர் பெண்களும் சிறுமிகளும் ஆவர். கடத்தல் கும்பல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் முறையற்ற கண்காணிப்பு போன்ற காரணங்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கே.என்.நேரு விவகாரம்: மனுதாரர் மீது அதிருப்தி தெரிவித்த ஐகோர்ட் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

கேஎன் நேரு வழக்கை தொடர்ந்த முக்கிய மனுதாரரான ஆதி நாராயணன் என்பவரின் பின்னணி குறித்து நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

டி20 உலகக் கோப்பை: ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத 2 பிரபல அணிகள்! இம்முறை கைப்பற்றுமா?

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடர் இம்முறை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்திய அணி கடந்த முறை டி20உலகக் கோப்பையை தட்டி சென்ற நிலையில், இம்முறை சொந்த மண்ணிலேயே நடப்பதால் மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், இதுவரை 9 டி20 உலகக் கோப்பைகள் நடந்துள்ளது. அதனை வென்றவர்கள் யார் யார்? வெல்ல தவறிய பிரபல அணிகள் … Read more