தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்! எங்கெல்லாம்? வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா

சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த  முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ   வரும் 8ந்தேதி  பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஜனவரி 1, 2026 முதல் அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% வரை ஓய்வூதியம் வழங்கும் ‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம்‘ (TAPS) அறிவித்துள்ளது. இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) அம்சங்களை ஒத்த ஒரு மேம்படுத்தப்பட்ட திட்டமாகும். 01-04-2003 முதல் 31-12-2025 … Read more

18 வயசு ஆகிடுச்சா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : பத்தாம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.    

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான  சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து,  தொகுதி உட்பட்ட ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது,  மருத்துவ உதவி, திருமண … Read more

Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி?

2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்… கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின், மணிப்பூரில் … Read more

முதுகலை ஆசிரியர் பணி கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Teacher Counselling : முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" – நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த … Read more

பிப். 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம்! தவெக தலைமை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என தவெகவினருக்கு அக்கட்சி தலைமை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றும் கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் … Read more