e-Shram Card : இ-ஷ்ரம் கார்டு.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்- உடனே விண்ணப்பிக்கவும்

e-Shram Card : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, இ-ஷ்ரம் கார்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதில், 31 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 2021 ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் இணையதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இந்த இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு  ஒரு யுனிவர்சல் … Read more

காலி பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற நடவடிக்கை! அமைச்சர் முத்துசாமி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற  திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி  கூறியுள்ளார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம்  திரும்ப வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  டாஸ்மாக் மதுபானக் கடைகள் வேண்டும் என்பது ஆளும் திமுகவின் நோக்கமோ விருப்பமோ … Read more

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! – விஜய்யை சீண்டும் நாதக?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. 2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர். கரூர் துயர சம்பவம் … Read more

தங்கத்தை இலவசமாக கொடுக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டங்கள்..!!

Tamil Nadu Free Gold Scheme : தமிழ்நாடு அரசு எந்தெந்த திட்டங்களுக்கு தங்கத்தை இலவசமாக கொடுக்கிறது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக ‘கில்லி’, ‘3’ போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. மங்காத்தா ரீ ரிலீஸ் கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் … Read more

பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல் – மீண்டும் ஆட்சிக்கு வராது! திமுக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

சென்னை: பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல்  திமுக அரசு என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வராது  என்று கூ றி உள்ளார். தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,  போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு,  விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் மற்றும் வெற்று அறிவிப்புகள் போன்ற காரணங்களால் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு உச்சத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி … Read more

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அடர்பச்சை … Read more

இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா கிடைக்காது – முக்கிய அப்டேட்

Free Patta : புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் யாரெல்லாம் தமிழ்நாடு அரசிடமிருந்து இலவச பட்டா பெற முடியாது? என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் – சுவாரஸ்ய தகவல்

Cricket Records : கிரிக்கெட் என்றாலே மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறப்பதையும், சிக்ஸர் மழையில் ரசிகர்கள் நனைவதையும் தான் நாம் பார்த்திருக்கிறோம். யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையை இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த மூன்று முக்கியமான பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கில் ஒரு விசித்திரமான சாதனைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். அவர்கள் தாங்கள் விளையாடிய சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் … Read more

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”  என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்தது, அதில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது. இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் … Read more