Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!

ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. “அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு … Read more

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…

சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்நாட்டில்  இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி,  சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் தேர்தல் … Read more

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' – போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? அண்ணாமலை அண்ணாவுடையே குடும்பத்தினர் யாரும் அரசியல் பக்கமே வருவதில்லை. கருணாநிதியின் மகன், பேரன், கொள்ளு பேரன் வரை அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.  திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவை பற்றி 10 வரிகள் கூட எழுதத்தெரியாது. என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக … Read more

"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். நரேஷ் ஐயர் சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் … Read more

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்  மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். … Read more

இந்தியா – அமெரிக்கா வரி: "கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்" – காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான … Read more

பட்ஜெட்டிற்கு பிறகு இந்த பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

உணவு மற்றும் குளிர்பானங்கள் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஏழை, எளிய மக்களை அன்றாட வாழ்வில் பாதிப்படைய செய்யும் என்று கூறப்படுகிறது.   

படுத்த படுக்கையாக கிடந்த அரவிந்த் சாமி..நடக்கவே முடியாமல் அவதி! மீண்டது எப்படி?

Arvind Swamy Recalls Accident : பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அரவிந்த் சாமி, தான் ஒன்றரை வருடங்களாக படுத்த படுக்கையாக கிடந்ததாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

அடுத்து வேலூரில் பேசப்போகும் விஜய்? தேதி மற்றும் இடம் எங்கு தெரியுமா?

விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவதற்குள் பல பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

இந்த ஒரு காரணத்திற்காக சஞ்சு சாம்சனை நீக்க முடியாது! ஏன் தெரியுமா?

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரை சிறப்பாக வென்று இருந்தாலும், இந்திய அணியில் சில பிரச்சினைகள் இருந்து … Read more