Neelira: "போரை விரும்பாதவர்களுக்கான படம் இது.!"- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார்.

நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நீளிரா
நீளிரா

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” ‘நீளிரா’ என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் போராலேயே நம் அன்றாட வாழ்வுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

அதில் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இன்னும் சாதாரண மக்கள் தான். ஒரு போர் சூழலில் கல்யாணம் நடக்கிறது.

அந்த இரவை எப்படி கடந்து வருகிறார்கள். எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு எமோஷனல் த்ரில்லராக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.

அந்த இரவை உணர்ந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். கடந்த காலப்போர் இப்போது இருக்கும் நிலைமை எல்லாவற்றிற்கும் இந்தப் படம் ஒரு மௌன சாட்சியாக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும்.

சூர்யா
சூர்யா

போரை விரும்பாதவர்களுக்கான படம் தான் இது. தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ரொம்ப ரொம்ப புதிதாக இருக்கும்.

எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ‘நீளிரா’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று படத்தை பாராட்டி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.