Labham – 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள்.

இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை பண்டிகை வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமான விஷயம். இதனால் நம் வீடுகளில் தங்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக எல்லா மக்களிடமும் இருப்பதால், இந்த நன்னாளில் பலரும் எந்தக் கடையில் தங்கம் வாங்கலாம், என்ன மாதிரியான நகையை வாங்கலாம் என பல குடும்பங்களில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அட்சய திருதியை

இன்றைய தேதியில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.1,56,660-ஆக இருக்கிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15,666-ஆகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,360-ஆகவும் இருக்கிறது.

தங்கம் விலை இப்போது மிகவும் உயர்ந்துவிட்டது என்பதால், இருக்கிற பணத்தில் குறைவான அளவில்தான் தங்கம் வாங்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, பணத்தை அங்கே, இங்கே என்று திரட்டி, அதிகமாக தங்கத்தை வாங்க நினைக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு, இனிவரும் காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்பதே.

Gold – தங்கம்

இந்த நிலையில், தங்கம் விலையானது கடந்த 55 ஆண்டுகளில் எப்படி உயர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பார்த்தால், ‘எப்படி இருந்த தங்கம் விலை இப்படி ஆகிடுச்சே!’ என்பது நமக்குப் புரியும்.

தங்கத்தின் விலை கடந்த 55 ஆண்டுகளில் எப்படி எல்லாம் உயர்ந்து வந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரத்தைத் துல்லியமாக எடுத்துச் சொல்லி இருக்கிறது குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘The Golden Quest’ என்கிற புத்தகம். ஆதிகாலம் தொட்டு தங்கம் எப்படி உருவாகி, மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதன் பயன்பாடு எப்படி எல்லாம் மாறி வந்திருக்கிறது, அதன் விலை கடந்த காலத்தில் எப்படி உயர்ந்து வந்திருக்கிறது என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது.

The Golden Quest

இந்தப் புத்தகத்தில் தங்கம் விலை கடந்த 55 ஆண்டுகளில் எப்படி உயர்ந்து வந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரம் ஆண்டுதோறும் எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. (பார்க்க, கீழே உள்ள படம்)

10 கிராம் தங்கத்தின் விலை 1971-ஆம் ஆண்டு வெறும் 193 என்கிற அளவில்தான் இருந்திருக்கிறது. அதாவது, ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ19.30 மட்டுமே! ஆனால், 1980-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் விலை ரூ.1330-ஆக உயர்ந்தது. தங்கத்தின் விலை 10 ஆண்டுகளில் ஏறக்குறைய ஏழு மடங்கு உயர்ந்தது ஆச்சரியமான விஷயம்தான்!

1981-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,670-ஆக இருந்தது. இதுவே 1990-ல் 3,200 ஆனது. இது ஒரு மடங்கு வளர்ச்சிதான்!

தங்கம்

1991-ஆம் ஆண்டில் ரூ.3466-ஆக இருந்த 10 கிராம் தங்கம் விலை, 2000-த்தில் ரூ.4,440-ஆக இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் தங்கம் கண்ட விலை உயர்வு வெறும் 26% மட்டுமே!

2001-ல் ரூ.4,300-ஆக இருந்த தங்கம் விலை 2010-ல் ரூ.18,500-ஆக உயர்ந்தது. இது ஏறக்குறைய மூன்று மடங்குக்கு மேலான வளர்ச்சி!

2011-ல் ரூ.26,400-ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, 2020-ல் ரூ.48651-ஆக இருந்தது. இது ஒரு மடங்கு வளர்ச்சிகூட இல்லை!

2021-ல் ரூ.48,720-ஆக இருந்த 10 கிராம் தங்கம் விலை, 2025 முடிவில் ரூ.1,32,650-ஆக இருந்தது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கிற்கு நெருக்கமான வளர்ச்சி!

இப்போதைய கேள்வி என்னவெனில், 2021 முதல் 2026 வரை ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், 2030 வரை இன்னும் 4.7 ஆண்டுகள் உள்ளன. இந்த 4.7 ஆண்டுகளில் தங்கம் விலை இன்னும் எவ்வளவு அதிகம் என்பதுதான்.

தங்கத்தின் விலை 1971 முதல் 1980 வரை அடைந்த அளவுக்கான லாபம் இதுவரை எப்போதும் அடைந்ததில்லை. 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு மடங்குகூட உயரவில்லை. ஆக, தங்கத்தின் விலை உயர்வு என்பது ஒரே மாதிரி இருக்காது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

தவிர, இந்த 10 ஆண்டுகளில் (2021 – 2026) தங்கத்தின் விலை இது 175% அதிகரித்துவிட்டது. இதில் இருந்து இன்னும் எவ்வளவு விலை அதிகரிக்கும் என்பது அனைவரும் கேட்கும் கேள்வி.

போர்

இந்தக் கேள்விக்கான பதிலை யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. காரணம், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. தங்கத்திற்கான தேவை அதிகரிப்பது, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது, போர்ப் பதற்றம் என பல காரணங்களினால் தங்கத்தின் விலை நிர்ணயமாகிறது.

இப்போதுள்ள சூழலில், உலக அளவில் போர்ப் பதற்றம் நிலவுவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலேயே இருக்கிறது. இதனால், ரூ.1,56,000-ஆக இருக்கும் 10 கிராம் தங்கத்தின் விலை, 2030-க்குள் ரூ.1,71,000 வரை இந்த ஆண்டில் உயர்ந்ததைப் பார்ப்போம். அடுத்த 4 ஆண்டுகளில் தங்கம் விலை ரூ.2,00,000 என்கிற அளவுக்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

நிபுணர்களின் இந்தக் கணிப்பு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்! எனவே, எல்லாப் பணத்தையும் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்யாமல், கொஞ்சம் தங்கம், கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம்!

உங்களுக்கு   முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வருகிற 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11 மணி முதல் 1 மணி நடக்கும் ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்!

https://labham.money/events/webinar-apr19-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr19_2026

வாட்ஸ் அப் குரூப்பில் சேர…

https://labham.money/events/webinar-apr19-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr19_2026

Labham Whatsapp Channel

‘லாபம்’ வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்…
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: www.labham.money/tamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.