Kayadu Lohar: `பவழமல்லி' – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர்.

மல்லுவுட்டில் டோவினோ தாமஸுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 15) திரையரங்குகளில் வெளியாகிறது.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘பவழ மல்லி’ பாடல் சமூக வலைதளங்களில் பயங்கர வைரல் ஆனது. அதில் கயாடு லோஹரின் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இப்படி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என ஆல் ஏரியாவிலும் கயாடு லோஹரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து ரிலீஸுக்கும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா…

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது.

இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த ‘ஆயா ஷேர்’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஹிட் அடித்திருந்தது. இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

இதைத் தாண்டி, தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘இம்மார்டல்’ படத்தில் கயாடு நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘இதயம் முரளி’ திரைப்படத்திலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதுதவிர, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ (I’m Game) படத்திலும் கயாடு லோஹர் நடிக்கிறார். இவை அனைத்துமே இந்தாண்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.