ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.12) மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.
இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசியிருந்தார்.
அப்போது பந்து ஈரமாகிவிட்டதால், நடுவர்கள் அதை மாற்ற முடிவு செய்திருக்கின்றனர். மாற்றப்பட்ட புதிய பந்தின் தரத்தைப் பற்றி சந்தேகப்பட்டதால் டிம் டேவிட் அதை தனது கைகளிலேயே வைத்து தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
தவிர ஆட்டத்தைத் தொடங்குவதற்காக நடுவர்களிடம் பந்தை உடனடியாகக் கொடுக்க மறுத்த டிம் டேவிட், பந்தை தனது கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த நடுவர்கள் வீரேந்தர் சர்மா மற்றும் ஸ்வரூபானந்த் கண்ணூர், மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து பந்தை வாங்க முயன்றபோதும், அவர் அதை கொடுக்காமல் தன் கைகளில் வைத்துக்கொண்டதால் அவர்கள் கோபமடைந்தனர்.
That was utter disrespect towards the on-field umpires.
The umpire repeatedly asked for the ball, but Tim David remained adamant about checking it.
Finally, Virender Sharma, who was standing at a distance, had to issue a stern warning to David. pic.twitter.com/n612PGVSWq
— Cricketopia (@CricketopiaCom) April 12, 2026
ஒரு பேட்டராக பந்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு அனுமதி இல்லை என்பதை நடுவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் டிம் டேவிட்டுக்கு போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்திருக்கிறது. மேலும் ஒரு மதிப்பிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.