சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்லும்போது, அரச பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் […]