பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் ‘KD: The Devil’.
‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த KVN தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று அப்படத்தின் டிரெய்லரை யூடியூப்பிலிருந்து நீக்கியிருந்தது KVN நிறுவனம்.
இந்நிலையில் யூடியூப்பிலிருந்து டிரெய்லரை நீக்கியது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.
இதுதொடர்பாக KVN நிறுவனம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், “சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்ட ‘KD: The Devil’ திரைப்படத்தின் டிரெய்லரில், கவனக்குறைவாக சான்றிதழ் அளிக்கப்படாத சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

எனவே, நாங்கள் அந்த டிரெய்லரை நீக்கிவிட்டோம். மேலும் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம்.
இந்தக் கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். மேலும் அனைத்து சான்றிதழ் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்திருக்கின்றனர்.