அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். 

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மேற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், அவரது கணவர் ராஜேந்திரன் மற்றும் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தனபதி ஆகியோர் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.