குவாலியர் : வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்த உயரம் குறைந்த வாலிபருக்கு சமூக வலைதள பதிவு காரணமாக, 35 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம் கொண்டவர். அதனால், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேலி,கிண்டலுக்கு ஆளானார். ஆனால், இதை மீறிஅவர் பட்டப் படிப்பை முடித்து, 2020லிருந்து வேலை தேடி அலைகிறார். அவரது உயரம் காரணமாக எங்குமே வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அங்கேஷ் கோஷ்தி பற்றி அறிந்த குவாலியர் தெற்கு தொகுதி காங்., – எம்.எல்.ஏ., பிரவின் பதாக், அங்கேஷ் பற்றி ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து இருந்தனர். அடுத்த சில மணிநேரத்தில், அங்கேஷ் கோஷ்திக்கு வேலை தர பல நிறுவனங்கள் முன் வந்தன. இதுவரை 35 நிறுவனங்கள் அங்கேஷை ‘இன்டர்வியூ’வுக்கு அழைத்துள்ளன. இதனால் அங்கேஷ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குவாலியர் : வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்த உயரம் குறைந்த வாலிபருக்கு சமூக வலைதள பதிவு காரணமாக, 35 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ளன.மத்திய பிரதேசத்தில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.