பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதியின் படத்துக்கு  முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள் ஆகும். இது அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். மேலும் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.