சென்னையில் அக்.15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணியை பொறுத்தவரையில் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் தற்போது 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. தேவையை அறிந்து மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.