ஜேர்மனியில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை


பிரபல தொலைக்காட்சி நடிகையான மூன்மூன் தத்தா (Munmun Dutta) சுற்றுலா மீது பெரும் ஆர்வம் கொண்டவர் ஆவார்.

ஐரோப்பிய சுற்றுலா புறப்பட்ட தத்தா

மூன்மூன் தத்தா, சென்ற வாரம் ஐரோப்பிய சுற்றுலா புறப்பட்டார். முதலில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த தத்தா, இரண்டு நாட்களுக்கு முன் ஜேர்மனிக்கு புறப்பட்டார்.

ஜேர்மனியில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை | Famous Actress Involved In An Accident In Germany

image – instagram

விபத்தில் சிக்கிய தத்தா

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட தத்தா, சிறிய விபத்தொன்றில் தான் சிக்கியதாகவும், தனது முழங்காலில் மோசமாக அடிபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தனது ஐரோப்பிய சுற்றுலாவை முடித்துக்கொண்டு தான் நாடு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார் தத்தா.

இதற்கு முன் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த தத்தா, அது தொடர்பான பல வீடியோக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
 

ஜேர்மனியில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை | Famous Actress Involved In An Accident In Germany

image – instagram  


 









Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.