பணத்தை தண்ணீராக செலவழித்து மனைவியை கனடாவுக்கு அனுப்பிய இந்தியர்! எல்லாம் போச்சு என கதறும் பரிதாபம்


கனடாவில் spouse விசாவில் சென்று அங்கேயே நிரந்திரமாக வாழும் கணவில் இருந்த நபர் தனது மனைவியால் பல லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

spouse விசாவில் 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பம்மிபுராவை சேர்ந்தவர் மந்தீப் சிங். இவருக்கும் ககந்தீப் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது.

ககந்தீப்பின் படிப்பு விசாவுக்கான செலவுகளை மந்தீப் ஏற்றுக்கொண்டால், திருமணத்திற்குப் பிறகு spouse விசாவில் கனடாவுக்கு அவரை அழைத்து செல்ல உதவுவதாக குடும்பத்தார் உறுதியளித்தனர்.

இதையடுத்து கல்லூரி கட்டணம், விமான கட்டணம், விசா கட்டணம் மற்றும் இதர செலவுகள் என ரூ. 39.57 லட்சம் செலவு செய்து மனைவியை மந்தீப் கனடாவுக்கு அனுப்பினார்.

பணத்தை தண்ணீராக செலவழித்து மனைவியை கனடாவுக்கு அனுப்பிய இந்தியர்! எல்லாம் போச்சு என கதறும் பரிதாபம் | Canada Spouse Visa Wife Husband

Getty

கனடாவுக்கு சென்றதும் மாறிய பெண்

கனடாவில் இருந்து இடையில் சொந்த ஊருக்கு வருவேன் என தெரிவித்துவிட்டு கிளம்பிய ககந்தீப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி திரும்பி வரவே இல்லை.

இறுதியில், கணவரின் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் நிராகரித்தார்.
இதையடுத்து மந்தீப், ககந்தீப் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, ​​அவர்கள் திரும்ப தர மறுத்துவிட்டனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், செப்டம்பர் 8, 2022 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விடயத்தை விசாரித்த பிறகு, பொலிசார் ககந்தீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.