கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் திடீரென்று புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
