வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் 1.52 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது திமுக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சிவகங்கை: வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு 1.52 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை, நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ‘அறிவு சார் மையம்’ அமைக்கப்படும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பார்வையிட்டார். தொடர்ந்து, பகுத்தறிவு பகலும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு 1.52 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அரசு மட்டுமே பணி வாய்ப்பு வழங்க முடியாது, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சிவகங்கைக்கு வேளாண் கல்லூரி, காரைக்குடிக்கு சட்டக் கல்லூரி உள்ளிட்டவற்றை முதலமைச்சர் வழங்கி உள்ளார். 113 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.