முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்


முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபா என அறவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் | Fixation Of Maximum Retail Price For Eggs

அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இன்று (21.01.2023) முதல் இந்த அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தின் பிரகாரம் முட்டை விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.