சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலை அருகே இருக்கும் கீழ்கட்டளை ஏரி நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோழி இறைச்சிக் கழிவுகள், நெகிழி கழிவுகள், பீங்கான் பொருட்கள் என பல்வேறு கழிவுகள் காணப்படுகிறது.
