நாளையுடன் நிறைவடையும் ராகுல் யாத்திரை; பங்கேற்கும் எதிர்கட்சிகள் லிஸ்ட்.?

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார்.

இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் யாத்திரை நடைபெற்று வருகிறது.

அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதனால் நேற்று முன் தினம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

காஷ்மீரில் நேற்று முன் தினம் 20 கிலோ மீட்டர் நடக்க இருந்த ராகுல் காந்தி, சுமார் ஒரு கி.மீ.க்குப் பிறகு நிறுத்த வேண்டியதாயிற்று. ராகுல் காந்தியுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவும் உடன் இருந்தார்.

ராகுல் காந்தி ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் பனிஹால் சுரங்கப்பாதையைக் கடந்தபோது, ஒரு பெரிய, எதிர்பாராத கூட்டம் இருந்த போது, பாதுகாப்பாளர்கள் திடீரென மாயமாகினர் என்று காங்கிரஸ் தெரிவித்தது. பெரிய கூட்டம் இருந்தபோது பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ஆனால் பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்தது. 15 மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF), 10 ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிறப்புப் படைகள் உட்பட முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என தெரிவித்தது. மேலும் ராகுல் யாத்திரையின் கடைசி நாளில் பெருமளவு மக்கள் கூட்டம் கலந்து கொள்ளும். எனவே உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து நேற்று பாதயாத்திரையை மீண்டு துவங்கிய ராகுல் காந்தியுடன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி கலந்து கொண்டார். இந்தநிலையில் ராகுல் பாதயாத்திரையின் கடைசி நாளில் கலந்து கொள்ள 21 எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றுவதன் மூலம் நாளையுடன் (30ம் தேதி) யாத்திரை முடிவடைகிறது. இந்தநிலையில் 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 15 கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ள வில்லை என அறிவித்துள்ளது.

திரிபுரா தேர்தல்; வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

திமுக, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தளம், ஒருங்கிணைந்த ஜனதா தளம், சிவ சேனா, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 15 கட்சிகள் நாளை கலந்து கொள்ள உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.