இலங்கை ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது போட்டி

இலங்கை ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி நாளை (07) காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இலங்கை ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 333 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.