இம்பால் மணிப்பூர் மாநில அரசு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். ராகுலின் இந்த பாத யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, கட்சிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்தது. பாத யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதி […]
