சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது ஹாலிடேவை ஜாலியாக கொண்டாடும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த அர்ச்சனாவின் ஆர்மியினர் ஹார்ட்டீன்களை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன்.