EPFO UAN Actiovation : எம்ப்ளாயீஸ் புரோவிடெண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO), பணியாளர்களின் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) மற்றும் ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்க கடைசி தேதியை ஜூன் 30, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை முடிக்காதவர்கள் Employment Linked Incentive (ELI) திட்டத்தின் நிதி நன்மைகளை இழக்க நேரிடும்.
ELI திட்டம் என்றால் என்ன?
2024 யூனியன் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்தத் திட்டம், ஃபார்மல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. இது ELI-A, ELI-B மற்றும் ELI-C என மூன்று வகைகளில் நன்மைகளை வழங்குகிறது.
ELI நன்மைகள் பெற என்ன செய்ய வேண்டும்?
– ஏற்கனவே செய்யவில்லை என்றால் UAN இப்போதே உடனடியாக ஆக்டிவேட் செய்யவும்
– ஆதாரை UAN மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கவும்.
– EPFO இணையதளத்தில் உறுதிப்படுத்தல் செய்யவும்.
UAN என்றால் என்ன?
UAN (Universal Account Number) என்பது உங்கள் இபிஎஃப் (EPF) கணக்கின் நிரந்தர அடையாள எண். வேலை மாறினாலும் இந்த எண் மாறாது. ஆன்லைனில் EPF சேவைகளை அதாவது பேலன்ஸ் சரிபார்த்தல், பாஸ்புக்கு டவுன்லோட் செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் பயன்படுத்த இது உதவுகிறது.
UANஐ ஆதார் OTP மூலம் செயல்படுத்துவது எப்படி?
– EPFO மெம்பர் போர்ட்டில் செல்லவும்.
– “Activate UAN” ஆப்சனை கிளிக் செய்யவும்.
– உங்கள் UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
– “Get Authorisation PIN” கிளிக் செய்து, OTP உள்ளிடவும்.
– சரிபார்த்த பிறகு, உங்கள் UAN கடவுச்சொல் SMS மூலம் அனுப்பப்படும்.
ஆதாரை UAN மற்றும் வங்கி கணக்குடன் இணைப்பது எப்படி?
– EPFO உள்நுழைந்து, “KYC” பகுதியில் செல்லவும்.
– ஆதார் மற்றும் வங்கி விவரங்களை சரிபார்த்து அப்டேட் செய்யவும்.
– “Save” செய்து, EPFO ஒப்புதலுக்காக காத்திருக்கவும்.
EPFO 3.0 – புதிய அப்டேட்டுகள்
ஜூன் 2025 முதல் EPFO 3.0 புதுப்பிக்கப்பட்ட சேவையுடன் வருகிறது. ATM இலிருந்து நேரடியாக EPF பணத்தை திரும்பப் பெறலாம். UPI மூலம் உடனடி பணம் பெறலாம்.
ஏன் இது முக்கியம்?
ஜூன் 30, 2025 வரை UAN மற்றும் ஆதார் இணைப்பை முடிக்காவிட்டால், ELI நன்மைகளை இழக்க நேரிடும். வங்கி கணக்கு இணைக்கப்படாவிட்டால், EPF பணம் திரும்பப் பெற முடியாது. EPFO/அரசு யாரும் தொலைபேசியில் UAN/ஆதார் விவரங்களை கேட்க மாட்டார்கள். அதிகாரப்பூர்வ EPFO வலைத்தளத்தை மட்டும் பயன்படுத்தவும். மேலும் உதவிக்கு, EPFO ஹெல்ப்லைன்: 1800-118-005 தொடர்பு கொள்ளவும்.