AUS vs SA: ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸ்
அதன்படி முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66, அலக்ஸ் கேரி 23 ரன்களையும் அடித்திருந்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக மார்கோ யான்சன் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி 212 ட்ரையல் ரன்களை துரத்தியது.
ஆனால் அந்த அணியால், 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆதிக்கம் செலுத்தி தென்னாப்பிரிக்கா அணியை ஆல் அவுட் ஆக வழி வகுத்தார். அவர் 6 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் எதிரணியின் கேப்டனை வீழ்த்தும் நிகழ்வை ஏற்படுத்தினார். அவர் பவுமா விக்கெட்டை வீழ்த்தி 175க்கு பின்னர் இந்த சாதனையை செய்தார். தென்னாப்பிரிக்கா அணி சார்பில், அதிகபட்சமாக பெடிங்ஹாம் 45 ரன்களையும், பவுமா 36 ரன்களையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பேட்டிங் (இரண்டாவது இன்னிங்ஸ்)
இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 74 லீட் ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. உஸ்மான் கவாஜா 6, கிரீன் 0, லபுசென் 22, ஸ்மித் 13, ஹெட் 9, வெப்ஸ்டர் 9, அலக்ஸ் கேரி 43, மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களும் எடுத்தனர். சொல்லப்போனால், 200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க பெரிய உதவியாக இருந்தது மிட்செல் ஸ்டார்க் என கூறலாம்.
அவர் நக்கூறம்போல் களத்தில் நின்று, பந்துகளை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். அரைசதத்தையும் கடந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் அடித்த அரைசதம், அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது அரைசதம் ஆகும். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் 20.5 என்ற சராசரியை வைத்திருக்கிறார்.
282 ரன்கள் இலக்கு
தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. தென்னாப்பிரிக்கா அணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. கிரிக்கெட்டில் ஒரு பெரிய அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா பெரிதாக கோப்பைகளை கைப்பற்றியதில்லை. அதனாலேயே இந்த இறுதி போட்டிக்கு அனைவரின் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொண்டு இந்த இலக்கை எட்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லுமா என்பதை பொருத்திருந்தாதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிங்க: சுத்தமா பிடிக்கல.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய செளரவ் கங்குலி!
மேலும் படிங்க: உலக கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்திய தமிழக வேகப்பந்து வீச்சாளர்.. மணிக்கு 147.3 கிமீ வேகம்