சினிமா ரசிகர்களுக்கு வரும் ஜூலை மாதம் ஒரு கொண்டாட்டமான மாதம். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது. அதில் விஜய் சேதுபதி, அனுஷ்கா, வடிவேலு, சித்தார்த், சசிகுமார், விமல் என பலரின் படங்களும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மே மாதம் வரை தமிழில் 114 படங்கள் வெளியாகியிருக்கிறது என்றும், அதில் சிறிய அளவில் தான் படங்கள் ஹிட் அடித்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம். இந்நிலையில் அடுத்து வெற்றி வாகை சூட காத்திருக்கும் படங்கள் திரை தொட காத்திருக்கிறது. அதில் சில படங்களை இங்கே பார்க்கலாம்.

‘Ghatti’
நீண்டதொரு இடைவெளிக்கு பின் அனுஷ்கா நடிக்கும் ‘Ghatti’, பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. ‘வானம்’ கிரிஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ் என பலரும் நடித்துள்ளனர். நாகவெள்ளி வித்யா சாகர் இசையமைத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம், ஜூலை 11ம் தேதி வெளியாகிறது

‘பறந்து போ’
‘கற்றது தமிழ்; ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ என கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய ராம் அடுத்து இயக்கியுள்ள படம் ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘டாடி ரொம்ப பாவம்’ பாடலை கூட நடிகர் சூரி சிலாகித்து பாராட்டியிருந்தார். ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘பறந்து போ’.
‘3BHK’
சித்தார்த், சரத்குமார், தேவயானியின் நடிப்பில் வரும் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் ஜூலையில் வெளியாகும் படம் ”3BHK’. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இந்த படத்தில் தான் நனவாகியிருக்கிறது என்று சித்தார்த் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். சரத்குமார், தேவயானி என ‘சூர்யவம்சம்’ காம்பினேஷன் இதில் இடம்பெற்றிருக்கிறது.

‘ஃப்ரீடம் ஆகஸ்ட் 14’
‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் வெற்றிக்கு பின் சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘ஃப்ரீடம் ஆகஸ்ட் 14’ . ‘கழுகு’ சத்ய சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தில் லிஜோமோல், போஸ் வெங்கட், மாளவிகா அவினாஷ் என பலரும் நடித்துள்ளனர். 1991 – 95 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது.

‘தேசிங்கு ராஜா 2’
இயக்குநர் எழில், விமல் கூட்டணியில் கடந்த 2013ல் வெளியான படம் ‘தேசிங்குராஜா’. பாடல்கள், காமெடிக்காக வெற்றி பெற்ற இப்படத்தின் ‘பார்ட் 2’ ‘தேசிங்கு ராஜா 2’ ஆக வெளியாகிறது. இமானுடன் கைகோர்த்து வந்த எழில், இந்த படத்திற்காக வித்யாசாகருடன் கூட்டண் அமைத்துள்ளார். விமலின் ஜோடியாக பூஜிதா நடித்துள்ளார். தவிர ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா என வெவ்வேறு குறிக்கோளுடன் காலேஜில் படித்த நான்கு பேர், வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் சந்திக்க, அதன்பிறகு நடக்கும் காமெடி கலாட்டக்கள் தான் ‘தேசிங்கு ராஜா2’. ஜூலை 11ல் திரைக்கு வருகிறது.

‘மாரீசன்’
‘மாமன்னன்’ படத்திற்கு பின் பஹத் பாசில், வடிவேலு காம்பினேஷனில் வெளியாகும் படம் ‘மாரீசன்’. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் சுதீஷ் ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸின் 98-வது படமாக இந்த உருவாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் இதற்கு முன் சின்னத்திரையிலும், தமிழ், மலையாளத்திலும் படங்களை இயக்கியவர். ‘மாரீசன்’ ஜூலை 18ல் ரிலீஸ் ஆகிறது.

‘தலைவன் தலைவி’
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ என குடும்பப்பாங்கான வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இப்போது முதன்முறையாக விஜய்சேதுபதி, நித்யாமேனனை வைத்து ‘தலைவன் தலைவி’என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா, ரோஷினி, சென்ட்ராயன் என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜுலை 18ம் தேதி வெளியாகிறது.
இது தவிர ஏராளமான சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளன. இம்மாதத்தில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…