Oppo K13x 5G: ஓப்போ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு முக்கிய செய்தி. இந்திய சந்தையில் Oppo, K தொடரில் இன்று அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் Oppo K13x 5G ஐஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் MIL-STD-810H சான்றிதழைக் கொண்டுள்ளது. இது கடினமான சூழல்களிலும் பயன்படுத்தப்படலாம். இந்த போன் IP65 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
இன்று அறிமுகம் ஆகியுள்ள ஓப்போவின் Oppo K13x 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Oppo K13x 5G விலை
Oppo K13x 5G இன் 4GB + 128GB மாறுபாட்டின் விலை ரூ.11,999, 6GB + 128GB மாறுபாட்டின் விலை ரூ.12,999 மற்றும் 8GB + 256GB மாறுபாட்டின் விலை ரூ.14,999 ஆக உள்ளது. இந்த போன் ஜூன் 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Oppo India ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும். இந்த போன் மிட்நைட் வயலட் மற்றும் சன்செட் பீச் வண்ணங்களில் கிடைக்கிறது. அறிமுகச் சலுகையில், வங்கி அட்டை கொண்டு வாங்குவதன் மூலம் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இது மட்டுமல்லாமல், மூன்று மாத கட்டணமில்லா EMI விருப்பமும் இதில் உள்ளது.
Oppo K13x 5G விவரக்குறிப்புகள்
Oppo K13x 5G 6.67-இன்ச் HD + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1604 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits பீக் ப்ரைட்னசைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் ARM Mali-G57 MC2@1072MHz GPU உடன் MediaTek Dimensity 6300 6nm செயலி உள்ளது. இந்த ஃபோனில் 4GB / 6GB / 8GB LPDDR4X RAM (8GB வரை மெய்நிகர் ரேம் விரிவாக்கம்) மற்றும் 128GB / 256GB UFS 2.2 சேமிப்பிடம் உள்ளது. இதை microSD மூலம் 1TB வரை விரிவாக்கலாம். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது.
Oppo K13x 5G கேமரா
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, இதன் பின்புறத்தில் f/1.88 அபர்சர் கொண்ட 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவும், f/2.4 அபர்சர் கொண்ட 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவும் உள்ளன. மேலும், செல்ஃபிகளை எடுக்கவும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் f/2.05 அபர்சர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது.
Oppo K13x 5G போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போனில் தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பிற்காக IP65 மதிப்பீடும் மிலிடரி-கிர்ட் டியூரபிலிடியும் (MIL-STD-810H) உள்ளது.
இதன் அளவுகளை பற்றி இனி காணலாம்.
– இந்த போனின் நீளம் 165.71 மிமீ,
– அகலம் 76.24 மிமீ,
– தடிமன் 7.99 மிமீ மற்றும்
– எடை 194 கிராம்.
Oppo K13x 5G இணைப்பு விருப்பங்கள்
இணைப்பு விருப்பங்களில் 5G NA/NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவற்றுடன் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. இந்த போன் 45W SuperVOOC வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.