மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது.

ஆர்​ஜேடி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சிறு​வர்​கள் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர். இந்த சிறு​வர்​களை, ரவுடிகளாக உரு​வாக்க ஆர்​ஜேடி விரும்​பு​கிறது. இதை ஒரு​போதும் அனு​ம​திக்க மட்​டோம். பிஹாரை சேர்ந்த சிறு​வர், சிறுமியர் எதிர்​காலத்​தில் இன்​ஜினீயர்​களாக, மருத்​து​வர்​களாக, வழக்​கறிஞர்​களாக, நீதிப​தி​களாக உரு​வெடுக்க வேண்​டும்.

அதற்​காக தேசிய ஜனநாயக கூட்​டணி அயராது பாடு​பட்டு வரு​கிறது. மாணவர்​களுக்கு ஆர்​ஜேடி துப்​பாக்​கி​களை வழங்​கு​கிறது. அதே​நேரம் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மாணவ, மாண​வியருக்கு மடிக்​கணினிகள் வழங்​கப்​படு​கின்​றன. காட்​டாட்சி காலத்​தில் பிஹார் முழு​வதும் வன்​முறை​யும் ஊழலும் கோலோச்​சின. அந்த ஆட்​சிக் காலத்​தில் மாநிலம் பெரும் பின்​னடைவை சந்​தித்​தது. சுமார் 15 ஆண்டு கால காட்​டாட்​சி​யில் பிஹாரில் ஒரு ஆலை கூட புதி​தாக தொடங்​கப்​பட​வில்​லை. பெரிய மருத்​து​வ​மனை​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட​வில்​லை.

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு மாநிலம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. புதிய ஆலைகள், பெரிய மருத்​து​வ​மனை​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு வரு​கின்​றன. சில நபர்​கள் (ராகுல் காந்​தி) பிஹாரின் மீன் உற்​பத்தி தொழிலை பார்​வை​யிட வந்​துள்​ளனர். அவர்​கள் குளத்​தில் மூழ்கி நீச்​சல் அடிக்க பயிற்சி பெற்​றுள்​ளனர். வரும் தேர்​தலில் அவர்​கள் முழு​மை​யாக மூழ்க உள்​ளனர். அதற்கு அவர்​கள் இப்​போதே தண்​ணீரில் மூழ்கி பயிற்சி செய்து வரு​கின்​றனர்.

பிஹார் மண், அமை​தி​யின் பிறப்​பிடம் ஆகும். ஆனால் காட்​டாட்சி காலத்​தில் இந்த மண் வன்​முறை பூமி​யாக மாற்​றப்​பட்​டது. தற்​போது முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நல்​லாட்சி நடை​பெறுகிறது. இந்​தி​யா​வின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்த ஒரு​வரும் (ராகுல் காந்​தி), பிஹாரின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்த ஒருவரும் (தேஜஸ்வி யாதவ்) இணைந்து மீண்​டும் காட்​டாட்​சியை ஏற்​படுத்த முயற்சி செய்​கின்​றனர். பிஹாரில் காட்​டாட்சி ஏற்​பட்​டால் சட்​டம், ஒழுங்கு சீர்​கெடும்.

அனைத்து துறை​களி​லும் ஊழல் அதி​கரிக்​கும்​. சமூக ஒற்​றுமைக்​கு ஆபத்​து ஏற்​படும்​. வளர்​ச்​சி அடைந்​த இந்​தி​யாவை உரு​வாக்​க பிஹார்​ ​மாநிலம்​ வளர்​ச்​சி அடைய வேண்​டும்​. அதற்​கு தேசிய ஜன​நாயக கூட்​ட​ணிக்​கு மக்​கள்​ ​வாக்​களிக்​க வேண்​டு​கிறேன்​.இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.