டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன 5 பேரின் குடும்பக் கனவுகள்

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் ஒரு பயணியை இறக்​கி​விட்டு வரும்​போது இந்த குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். பங்​கஜ் சைனி​யின் தந்தை இதுகுறித்து கூறும்​போது, “பயணியை இறக்​கி​விட்டு பங்​கஜ் தனது காரில் வரும்​போது​தான் இந்த குண்​டு​வெடிப்பு நடந்​துள்​ளது. எங்​கள் குடும்​பத்​தின் ஒரே நம்​பிக்கை பங்​கஜ்​தான். அவரை இழந்து எங்​களால் இருக்​கவே முடி​யாது. இந்த சம்​பவத்​துக்கு நீதி கிடைக்​கவேண்​டும்’’ என்​றார்.

டெல்லி போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பேருந்து நடத்​துந​ராக இருந்த அசோக் குமார் என்​பவரும் இதில் உயி​ரிழந்​தார். இதுகுறித்து அசோக் குமாரின் உறவினர் பப்பு என்​பவர் கூறும்​போது, “8 பேர் கொண்ட குடும்​பத்​தில் இவர் மட்​டுமே ஊதி​யம் ஈட்​டு​கிறார். இனி அந்​தக் குடும்​பத்​துக்கு யார்​தான் பாது​காப்​பு? தனது குடும்ப பாரத்தை தனி​யாக சுமந்​தவர் அசோக் குமார். இவரது தாயார் சோம்​வ​தி, தனது மூத்த மகனுடன் சொந்த ஊரில் வசிக்​கிறார். ஊதி​யம் போதாத​தால் இரவு நேரத்​தில் செக்​யூரிட்​டி​யாக​வும் பணி​யாற்றி வந்​தார் அசோக் குமார். அவர்​களது எதிர்​காலம் இனி கேள்விக்​குறி​தான்’’ என்​றார்.

22 வயதான நோமன் என்​பவரும் இந்த குண்​டு​வெடிப்​பில் தனது உயிரை பறி​கொடுத்​துள்​ளார். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் அழகு சாதனப் பொருட்​களை தனது கடைக்​காக வாங்க வந்​த​போது​தான் குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். நோமனின் மாமா ஃபர்​ஹான் கூறும்​போது, “நோமனின் உயி​ரிழப்பு அவரது குடும்​பத்​தைச் சிதைத்​து​விட்​டது. எங்​கள் மகனை இழந்​து​விட்​டோம். அவர் கடின உழைப்​பாளி. இந்த விஷ​யத்​தில் அரசு ஏதாவது செய்​ய​வேண்​டும். ஆனால், இந்த விஷ​யத்​தில் நடவடிக்கை எடுக்க அவர்​களுக்கு தைரி​யம் இல்​லை’’ என்​றார்

இந்த சம்​பவத்​தில் 34 வயதான மருந்​துக் கடை உரிமை​யாளர் அமர் கட்​டாரி​யா​வும் உயி​ரிழந்​து​விட்​டார். சம்​பவம் அறிந்​ததும் அவரது தந்​தை,
லோக் நாயக் மருத்​து​வ​மனை வாயி​லில் கதறி அழுதது பார்ப்​போர் நெஞ்சை உருக வைத்​தது. மருந்​துக் கடையி​லிருந்து அமர் கட்​டாரியா வீட்​டுக்​குத் திரும்​பிக் கொண்​டிருந்​த​போது இந்த சம்​பவம் நடந்​துள்​ளது. அமர் கட்​டாரி​யா​தான் அவரது வீட்​டுக்​காக உழைத்து வந்த ஒரே நபர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உத்தர பிரதேச மாநிலம் ஷ்ராவஸ்தி பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ் குமார் மிஸ்​ரா​வும் உயி​ரிழந்​தவர்​களில் ஒரு​வர். திருமண அழைப்​பிதழ் விற்​பனை செய்​யும் கடை​யில் அவர் பணி​யாற்றி வந்​தார். அவருக்கு மனை​வி, 3 குழந்​தைகள் உள்​ளனர். இதுகுறித்து அவரது மனைவி ரீனா கூறும்​போது, “என் கணவர் உயி​ரிழந்​த​தால் நாங்​கள் அனைத்​தை​யும் இழந்​து​விட்​டோம். எங்​கள் வாழ்க்கை போய்​விட்​டது. இந்த செய்​தியை டி.​வி.​யில் பார்த்​ததும் எனது கணவரின் தந்தை புரே, எனக்​குத் தகவல் தெரி​வித்​தார். நான் தினேஷுக்கு போன் செய்​த​போது அவர் எடுக்​க​வில்​லை. பின்​னர்​தான் இந்த சம்​பவத்​தில் அவர் உயி​ரிழந்​ததை அறிந்​து​கொண்​டேன்’’ என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.