ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாய் வாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.பிரபாகருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அவர்களுக்குள் வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தனது இதனால் சாய்வாணி கணவரை பிரிந்து வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் தனியார் மண்டபத்தில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.
இதகிடையே, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் வற்புறுத்தினார். ஆனால் கணவருடன் செல்ல சாய்வாணி மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் பிரபாகர் நேற்று காலை மனைவியின் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகர் அங்கிருந்த கோடாரியை எடுத்து மனைவியை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கத்தியை எடுத்து மனைவியின் உடல் மீது உட்கார்ந்து சரமாரியாக கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சாய்வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது மகள் தந்தையை தடுக்க முயன்றார். ஆனால் பிரபாகர், பெற்ற மகள் என்றும் பாராமல் அவரையும் கத்தியால் தாக்கினார். இதில் அவரது கை விரல்கள் துண்டானது. கால்கள் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பிரபாகரின் மகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய் வாணியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.