டி20 உலகக் கோப்பை தற்போது நெருங்கி உள்ளது. இத்தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 07) தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு பெரும் பிண்ணடைவு ஏற்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
Team India: இந்திய அணிக்கு தலைவலி
உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் (Warm-up Matches) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இப்போட்டியை இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து இந்திய அணி தனது பலத்தை காட்டி வருவது மகிழ்ச்சியை கொடுத்தாலும், நேற்று நடந்த சம்பவம் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
Harshit Rana Injury: ஹர்ஷித் ராணா காயம்
அதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியின்போது, பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, பாதியிலேயே வெளியேறினார். அவர் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதனை வீசும்போது கூட இரண்டு முறை பாதியிலேயே ஓடிவந்து பந்து வீச்சாமல் நின்றார். பின்னர் முழங்கால் வலியை தாங்கமுடியாமல் சிரமப்பட்ட அவர், மைதானத்தை விட்டு வெளியேறினார்.
T20 World Cup 2026: ஹர்ஷித் ராணா டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
இந்த நிலையில், ஹர்ஷித் ராணா உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்திய வீரர்கள் பலரும் காயத்தால் அவதிப்பட்டுள்ளனர். முதலில் திலக் வர்மா காயத்தால்அவதிப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போதுதான் களத்திற்கு திரும்பி உள்ளார். ஆல் – ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலா எழும்பு காயத்தால் அவதிபட்டு வருகிறார். தற்போது பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே பங்களிக்கக்கூடிய ஹர்ஷித் ராணா காயமடைந்துள்ளார். இது இந்திய அணியின் நிர்வாகத்திடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
India Playing 11 Strategy: இந்திய அணியின் பிளேயிங் 11 திட்டம்
ஹர்ஷித் ராணா அனைத்து போட்டியின் பிளேயிங் 11னிலும் இடம் பிடிக்கப்போவதில்லை. அமெரிக்கா போன்ற சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட வாய்ப்புள்ளது. பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்காமல் முக்கிய போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கும். இந்த சூழலில், ஹர்ஷித் ராணா காயம் அடைந்துள்ளதுதான் தலைவலியாக மாறி உள்ளது.
Who Will Replace Harshit Rana: ஹர்ஷித் ராணாவுக்கு பதில் யார்?
ஹர்ஷித் ராணா பிளேயிங் 11ல் இருப்பதால் பேட்டிங்கிலும் ஒரு கூடுதல் பலம் இந்திய அணிக்கு கிடைக்கிறது. சமீபத்தில் கூட ஒரு போட்டியில் 50 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால் எல்லாம் நன்றாக செல்லும். இல்லையென்றால், அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும். விரைவில் ஹர்ஷித் ராணாவின் நிலை குறித்து பிசிசிஐ தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji