அனைவரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் அடிக்க, 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source
हर हर महादेव pic.twitter.com/v2629OVGB4
— Surya Kumar Yadav (@surya_14kumar) February 15, 2026
இந்தியாவுக்கான வெற்றி!
பாகிஸ்தான அணியை வீழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த வெற்றி இந்தியாவுக்கானது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்று நினைத்தோமோ, அப்படித்தான் விளையாடினோம். இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். பவர் பிளேயில் தேவையான அதிரடியை அவர் கொடுத்தார். உள்ளூர் போட்டிகளில் அவர் எப்படி விளையாடினாரோ, அதே பார்மை இங்கேயும் தொடர்ந்தார். அது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி டாஸ் தோற்று இருந்தாலும், பேட்டிங் செய்தான் விரும்பினர். அதே போல பேட்டிங்கும் கிடைத்தது. பாகிஸ்தான அணி 20 ஓவர்களில் 18 ஓவர்களை ஸ்பின்னர்களை கொண்டு வீசி இருந்தாலும், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் இஷான் கிஷன் அதிரடி காட்டினாலும், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோர் பொறுப்பாக விளையாடிய அணியின் கோரை உயர்த்தினார்.
பந்து வீச்சிலும் மிரட்டல்
176 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணிக்கு, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா நல்ல ஒரு தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா. அதன் பிறகு வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார். பவுலிங் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “நாங்கள் 175 ரன்கள் அடித்த போதே இது சராசரியை விட 10 – 20 ரன்கள் அதிகம் என்று நம்பினோம். 150 ரன்கள் எடுத்திருந்தாலே அதனை சேஸ் செய்வது இந்த மைதானத்தில் கடினமான ஒன்று தான். பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவும், பும்பராவும் சிறப்பாக செயல்பட்டனர். பும்ரா ஏன் உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி குரூப் போட்டியில் தங்களது கடைசி ஆட்டத்தை வரும் 18ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
About the Author
RK Spark