`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' – அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக – சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது.

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை.

சண்முகம்
சண்முகம்

பெ.சண்முகம் பேசியதாவது, ‘மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இருக்கிறது.

எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு இன்று இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் சுமுகமாக முடியுமென நினைக்கிறேன்.

நிறைய கட்சிகள் இருப்பதால் எங்களையும் சீட்டுகளை குறைக்க சொன்னார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவர் கட்சிக்கு ஏற்ப தகுதிக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது உரிமை. காங்கிரஸ் இதில் வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை.

பேச்சுவார்த்தையில் எந்த தடையும் இல்லை. இன்று இரவோ அல்லது காலையிலோ கூட அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம்.

சண்முகம்
சண்முகம்

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவை கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.