LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" – லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற ‘சூப்பர் ஓவர்’ மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Pant
Pant

கையில் இருந்த போட்டியைத் தவற விட்ட பின்பு, லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது, ”உண்மையைச் சொல்லப்போனால், எங்களுக்கு இப்போது ஒரு சிறிய இடைவேளை தேவை என்று நினைக்கிறேன்.

நாங்கள் எங்களை மீண்டும் புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளப் போகிறோம். கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு அழுத்தம் இருக்கும், அதுவும் இது போன்ற போட்டிகளில் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஆனால், அதே சமயம், தோல்விக்கான காரணங்களை நாங்கள் வெளியிலிருந்து தேடாமல், எங்களுக்குள்ளேயே தேட வேண்டும்.

Pant
Pant

அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பல வீரர்கள் இதற்குப் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். பூரனை சூப்பர் ஓவரில் இறக்கியதைப் பற்றி கேட்கிறீர்கள். அவர் தற்போது தனது ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், கடினமான சூழல்களில் உங்கள் முக்கிய வீரர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

அவர்கள் சிறப்பாக மீண்டு வருவார்கள். எனவே, காரணங்களைச் சொல்ல விரும்பவில்லை. நேர்மறையான விஷயங்களை மட்டுமே பார்க்கிறேன். இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டு வருவோம்,” என்று பேசியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.