மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை கோலகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் பலர் புது தாலி மாற்றி பக்தியை வெளிப்படுத்தினர். பல பக்தர்கள் மணமக்களுக்குத் திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலானவற்றை மொய்யாக வழங்கினர். உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த வைபத்துக்காக அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையானது, வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் […]