Ola escooters – ஒரே மாதத்தில் முதல்முறையாக 30,000 ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதல்முறையாக ஒரே மாதத்தில் 30,000 விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளதாக ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 25 % பங்களிப்பை ஓலா நிறுவனம் பெற்றுள்ளது. Ola Electric Sales Report November 2023 ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்பொழுது சந்தையில் புதிய S1 ஏர் மற்றும் S1X  ஆகியவற்றுடன் S1 புரோ என மூன்று மாடல்களை பெற்றுள்ளது. … Read more

ஹூண்டாய் கார் விற்பனை நவம்பர் 2023ல் 3 % வளர்ச்சி – Hyundai India Sales Report November 2023

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 2023 மாதந்திர விற்பனை முடிவில் 65,801 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தை விட 3 % வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 49,451 யூனிட்களை விற்பனை செய்துள்ள நிலையில் முந்தைய ஆண்டு இதே மாத விற்பனையான 48,002 யூனிட்களை விட 3% அதிகமாகும். ஏற்றுமதி எண்ணிக்கை 16,530 ஆகும். Hyundai India Sales Report November 2023 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை குறித்து, … Read more

நவம்பர் 2023ல் மஹிந்திரா வாகனங்களின் விற்பனை 21 % வளர்ச்சி – Mahindra Sales Report Novmber 2023

கடந்த நவம்பர் 2023 மாதந்திர விற்பனையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி உட்பட 21 சதவிகித வளர்ச்சி அடைந்து 70,576 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கார்பியோ மாடலுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் உட்பட 2.8 லட்சத்திற்கும் அதிகமான எஸ்யூவிகளை இன்னும் டெலிவரி செய்யவில்லை என்று நவம்பர் மாதம் முன்னதாக கார் தயாரிப்பாளர் குறிப்பிட்டிருந்தது. Mahindra Sales Report November 2023 மஹிந்திரா எஸ்யூவி வாகனங்கள் பிரிவில், மஹிந்திரா உள்நாட்டு … Read more

Bajaj Chetak Urbane – ₹ 1.15 லட்சத்தில் 2024 பஜாஜ் சேட்டக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெக்பேக் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டெக்பேக் வேரியண்டில் கூடுதல் வேகம் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வேகம் மற்றும் ரேஞ்ச் வெளிப்படுத்தும் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. தோற்ற அமைப்பில் வசதிகளில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ளது. 2024 Bajaj Chetak Urbane சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 3 கட்ட PMSM மோட்டார் அதிகபட்சமாக … Read more

MG Motor and JSW Group JV – எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எம்ஜி மோட்டார் உடன் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி

சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வரத்தக விரிவாக்கத்திற்கு என ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்க மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பினை விரிவுப்படுத்த உள்ளது. இந்திய-சீன எல்லை பிரச்சனை காரணமாக எம்ஜி மோட்டார் தனது வரத்தகத்தை விரிவுப்படுத்த முடியாமல் போராடி வந்த நிலையில் 35 சதவிகிதம் பங்குகளை இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குரூப் கைபற்றியுள்ளது. MG Motor and JSW Group இந்திய ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் 35 % பங்குகளை … Read more

Hyundai Creta EV spied – ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படம் வெளியானது

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல் சோதனை ஓட்டம் இந்தியா உட்பட தென்கொரியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இறுதிகட்ட வடிவமைப்பினை பெற்றுள்ள கிரெட்டா இவி மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். Hyundai Creta EV ICE மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முகப்பினை பெற உள்ள கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் எல்இடி ஹெட்லைட் உட்பட ஸ்டைலிஷான முன்புற பம்பரை … Read more

Ather 450 Apex teased – மிக வேகமான ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது

ஏதெர் எனெர்ஜி அறிவித்தப்படி 450 வரிசையில் புதிய 450 அபெக்ஸ் (Ather 450 Apex) என்ற பெயரில் மிக வேகமான ஸ்கூட்டர் வரவுள்ளதை உறுதி செய்யும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு சோதனைக்கு ஈடுபடுத்தி கருத்துகளை பெற்றுள்ளது. சமீபத்தில் ஏதெர் ஃபேமிலி ஸ்கூட்டர் மற்றும் 450X அடிப்படையில் ஒரு ஸ்கூட்டர் என இரண்டை உறுதி செய்திருந்த மாடலில் ஒன்றை டீசர் மூலம் அபெக்ஸ் என உறுதியாகியுள்ளது. Ather 450 Apex ஏதெர் … Read more

Kia Sonet launch date – ADAS நுட்பத்துடன் 2024 கியா சொனெட் எஸ்யூவி டிசம்பர் 14 அறிமுகம்

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிட உள்ள சொனெட் எஸ்யூவி மாடல் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஹூண்டாய் நிறுவன வென்யூ மற்றும் கியா சொனெட் இரண்டு ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் வென்யூ காரில் அதிநவீன டிரைவர் உதவி அமைப்பு உள்ளது. 2024 Kia Sonet கியா சொனெட்டில் தொடர்ந்து மூன்று என்ஜின் தேர்வுகளில் எந்த … Read more

Renault Duster – இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்

ரெனால்ட் குழுமத்தின் டேசியா பிராண்டில் புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கு விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய டஸ்ட்டர் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு மிக தாமதமாகவே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Renault Duster CMF-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறை டேசியா டஸ்ட்டர் எஸ்யூவி மாடல் தொடர்ந்து ரெனால்ட், நிசான் பிராண்டில் டெரானோ எஸ்யூவி மாடலாக வரவுள்ளது. புதிய டஸ்ட்டர் சிறப்பான ஆஃப் … Read more

Maruti Dzire – 2024 மாருதி சுசூகி டிசையர் அறிமுக விபரம் வெளியானது

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற டிசையர் செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் கான்செப்ட் ஜப்பான் மோட்டார் அரங்கில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்திய சந்தையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படலாம். 2024 Maruti Suzuki Dzire புதிய ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் வரவுள்ள டிசையர் செடானில் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்கள் … Read more