மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ: மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.  விண்ணில் அனுப்பும் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்தும் திட்டம். திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெகதீஷ் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு தொற்று உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 2,994 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கிட்டதட்ட மக்கள் மறந்து போகும் அளவிற்கு இயல்பு வாழ்க்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை பல மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிப்பு

சென்னை: பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் விவரங்கள் திருடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பல்வேறு மாநில போக்குவரத்து கழகங்கள், இ-வணிக நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திருடப்பட்டது. 66.9 கோடி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை திருடி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.15,920 கோடியாக உயர்வு

புதுடெல்லி:  ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது எப்போதும் இல்லாதவகையில் 2022-2023ம் ஆண்டில்  ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில்,‘‘நாட்டில் ராணுவ தளவாடப்பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த  2018-2019ம் ஆண்டில் 10,745கோடியாகவும் இருந்தது. 2019-2020ம் ஆண்டில் ரூ.9115 கோடி மற்றும் 2020-2021ம் ஆண்டில் ரூ.8434கோடியாக இருந்தது.    2021-2022ம் ஆண்டில் ரூ.12,814கோடி மதிப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2022-2023ம் நிதியாண்டில் ஏற்றுமதியானது ரூ.15,920கோடியாக அதிகரித்துள்ளது.  … Read more

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகை வைத்து இலங்கை கடற்படை மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி!

சென்னை: அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவிற்கு அழைத்தார். எடப்பாடி பழனிசாமி எனக்கு நல்ல நண்பர் என்று அவர் தெரிவித்தார். பாஜகவில் தன்னுடைய நிலையை வெளிப்படுத்த நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம் நிதியாண்டில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.  கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  கடந்த 2021ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 … Read more

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!

நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.