ஐதராபாத்தில் ‘பப்’புக்கு சென்று திரும்பிய மைனர் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்: எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு?

திருமலை: ஐதராபாத்தில் பப்புக்கு சென்று திரும்பிய  மைனர் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபாரான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை 17 வயதுடைய மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றார். விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், மைனர் பெண்ணை தங்களின் சொகுசு காரில்  கடத்தினர். 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை … Read more

தனியார் பஸ் தீப்பிடித்து 7 பேர் பலி

பெங்களூரு: தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 7 பயணிகள் கருகி பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், கமலாபுரா தாலுகாவில் நேற்று அதிகாலை தனியார் பஸ் மீது எதிரில் வந்த வாகனம் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த இரு குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கமலாபுரா … Read more

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை: பிரதமர் மோடி

கான்பூர்: நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தெஹாத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடும்பங்களில் சிக்கியுள்ள கட்சிகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிலிருந்து மேலெழ வேண்டும் எனவும் கூறினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

சீனர்கள் விசா முறைகேடு கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: எந்த நேரத்திலும் கைது?

புதுடெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2010-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றிய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் நடந்த மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்காக ரூ.50 லட்சம் லஞ்சத்தை சிதம்பரத்தின்  மகன் கார்த்தி சிதம்பரம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.இதையடுத்து, சென்னை … Read more

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு தலைநிமிர தொடங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு தலைநிமிர தொடங்கிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மொழிக்காக, இனத்துக்காக உயிரை விடும் சூழல் வந்தாலும் அந்த தியாகத்தை செய்ய நான் தயார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபள்ளி மாவட்டம் அருகே பொருளாதார சிறப்பு மண்டல தொழிற்பேட்டை உள்ளது. இங்கு போரஜ் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் தொழிற்சாலையில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட அமோனிய வாயு கசிவின் காரணமாக அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாந்தி, … Read more

மண்சரிவில் பலியான சதீஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: மண்சரிவில் பலியான சதீஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடையில்லை: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: மதம் மாற சட்டப்படி தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடையில்லை என டெல்லி ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார், பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். இதையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெரிய அளவில் கட்டாய மதமாற்றம் … Read more

மண்சரிந்து தொழிலாளி சதீஷ் இறந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் பள்ளம் தோண்டும்போது மண்சரிந்து தொழிலாளி இறந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளி சதீஷ் உயிரிழந்த வழக்கில் சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு உள்ளிட்ட 4  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.